உலக கோப்பை டி20 போட்டிக்காக இந்திய அணியின் தலைமை ஆலோசகராக தோனி அடுத்த மாதம் இணைய உள்ளார். அதற்கு முன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு நான்காவது கோப்பையை வென்று தர கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் 2021ல் 7 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி அதில் 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் டெல்லி கேப்பிடல் அணி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு நுழையாமல் சென்னை அணி வெளியேறியது. அந்த சரிவில் இருந்து மீண்டு இந்தமுறை தனது ஆதிக்கத்தை செலுத்தியது சென்னை அணி. தினமும் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் தோனி அதனை முடித்து விட்டு தனியாக 3 முதல் 4 மணி நேரம் நெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் 14 போட்டிகளில் விளையாடி டோனி வெறும் 200 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் இதுவே தோனியின் மிகக்குறைந்த ரன்களாக இருந்தது. ஐபிஎல் 2021ல் இதுவரை தோனி 37 ரன்கள் அடித்து உள்ளார்.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் பயிற்சி ஆட்ட வீடியோவை வெளியிட்டு இருந்தது. அதில் கிட்டத்தட்ட டோனி தனது பழைய ஃபார்முக்கு திரும்பியது போல் இருந்தது. ட்விட்டரில் மட்டுமே இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்க்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. முதல் ஆட்டத்தில் மும்பை அணி இடம் சென்னை அணி தோன்றது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக இன்று சென்னை அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
All arealayum Thala...#WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) September 18, 2021
மேலும் ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளதால் சமூக வலைதளங்கள் முழுவதும் ஐபிஎல் ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR