IPL 2021: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 19, 2021, 11:33 PM IST
IPL 2021: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி title=

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி (Rajasthan Royals) முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி (Chennai Super Kings) முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்தது.

சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடி விரைவிலயே விக்கெட்களை இழந்தனர். இதில் டூபிளெசிஸ் அடித்த 33 ரன்களே அதிகபட்சமாக இருக்கிறது. மொயின் அலி 26, ராயுடு 27, தோனி 18 ரன்கள் குவித்துள்ளனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்லபட்டார்கள். இதில் சேதன் சாகரியா 3 விக்கெட்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

பட்லர் மற்றும் மனன் வோரா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 30 ரன்களாக உயர்ந்த போது மனன் வோரா சாம் கரணின் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்சாகி வெளியேறினார். இதே போல ஸ்கோர் 45 ரன்களாக உயர்ந்த போது சாம் கரணின் அடுத்த ஓவரில் டுவைன் பிராவோவிடம் கேட்சாகி வெளியேறினார்.

ALSO READ | எம்.எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படுமா? பதட்டத்தில் csk ரசிகர்கள்: முழு விவரம் உள்ளே

ரவீந்திர ஜடேஜா வீசிய அந்த ஓவரில் ஜோஸ் பட்லர் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் ராஜஸ்தான் அணி 11 ரன்களை திரட்டியது.

இதனிடையே இந்த ஆட்டத்தின் 12வது ஓவர் சென்னை அணிக்கு திருப்பு முனையாக இருந்தது. 35 பந்துகளில் அதிரடியாக 49 ரன்கள் குவித்து அரை சதத்திற்காக தயாராக இருந்த ஜோஸ் பட்லரை முதல் பந்திலேயே கிளீன் போல்டாக்கி அசத்தினார். இதன் பின்னர் அதே ஓவரின் கடைசி பந்தில் சிவம் துபேயையும் வெளியேற்றினார். 17 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் சிவம் துபே அவுட் ஆகினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்கள் இழந்திருந்த நிலையில் 16வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 105 ரன்களை எடுத்திருந்தது. அப்போது 24 பந்துகளில் 84 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ராகுல் திவாதியாவும், ஜெயதேவ் உனட்கட்டும் களத்தில் நின்றனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்படி ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில், ஆடிய சென்னை அணி, 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து, ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News