IPL 2020, CSK vs MI: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 13 வது சீசனின் 41 வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) இடையே ஷார்ஜாவில் நடைபெற்றது. சென்னையைப் பொறுத்தவரை, இந்த ஆட்டம் மிக முக்கியமானதாக இருந்தது. ஆனால் மும்பையிடம் தோற்று, ஐபிஎல் தொடரின் அடுத்த சுற்றுக்கான தகுதியை இழந்தது. இந்த ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்ததை அடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சாம் குர்ரன் (Sam Curran) நிதானமான ஆட்டத்தால், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. அதிகட்சமாக சாம் குர்ரன் 52(46) ரன்கள் எடுத்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
மும்பை அணி வெற்றி பெற 115 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இஷான் கிஷன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். குயின்டன் டி காக்* 46(37) மற்றும் இஷான் கிஷன்* 68(37) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்தனர்.