5 விக்கட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்

இன்று இரண்டு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்ற உள்ளது. அதில் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2019, 06:06 PM IST
5 விக்கட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் title=

06:05 PM 20-04-2019

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. துவக்க வீரர் குவிண்டன் டி காக் அதிகப்பட்சமாக 65(47) ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 34(33) ரன்கள் குவித்தார்.


15:40 20-04-2019
36வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்ய உள்ளனர்.

 

 


ஜெய்ப்பூர்: இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

8 போட்டிகள் விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு போட்டிகளில் மட்டும் வெற்றிப் பெற்று ஏழாவது இடத்தில உள்ளது. ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் கட்டாயமாகும். கடைசியாக நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் அதற்கு முன்பு நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே மும்பை அணியை லீக் போட்டியில் வீழ்த்தி உள்ளதால், இன்றும் அந்த அணியை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முன்னேற வேண்டும் என்ற வியூகத்துடன் விளையாடக்கூடும்.

12 புள்ளிகளுடன் 2_வது இடத்தில் இருக்கும் ரோஹித் தலைமையிலான மும்பை அணிக்கு இன்றைய வெற்றி தகுதி போட்டிக்கு தங்கள் இருப்பை உறுதி செய்ய தேவையான முக்கிய போட்டியாகும். ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் நிலையில் உள்ள மும்பை அணி, இன்று வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும். ஏற்கனவே ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்றால், இன்று அந்த அணியை வீழ்த்தி பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆடக்கூடும். 

36வது போட்டியான இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமாக இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Trending News