IPL 2019: வெல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு

இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 25, 2019, 07:37 PM IST
IPL 2019: வெல்வது யார்? டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு title=

19:35 25-04-2019
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

 


கொல்கத்தா: நேற்று நடைபெற்ற IPL 2019 தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் மூன்றில் வெற்றியும், ஏழு போட்டியில் தோல்வியும் சந்தித்து உள்ளது. புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடரில் தங்கள் இருப்பிடத்தை தக்க வைத்துக்கொள்ள நினைந்தால், ராஜஸ்தான் அணி தொடர்ந்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் அனைத்து லீக் போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் கட்டாயத்தில் உள்ளது.

அதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் நான்கில் வெற்றியும், ஆறு போட்டியில் தோல்வியும் சந்தித்து உள்ளது. கடைசியாக நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளிபட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல தகுதி பெரும்.

இன்று நடைபெறும் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கிய போட்டியாகும். வெற்றி பெரும் அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பாக அமையும். 

Trending News