IPL 2019: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ் - பந்து விச்சு தேர்வு

IPL 2019 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 10, 2019, 07:37 PM IST
IPL 2019: டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ் - பந்து விச்சு தேர்வு title=

19:38 10-04-2019
இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்றது. இதனையடுத்து மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

 

 


IPL 2019 தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் மும்பை அணியும் வாங்ஹே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சந்திக்க உள்ளனர். 

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி உற்சாகமாக உள்ளது. இந்த அணியின் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக தங்கள் பங்கை அளித்து வருகின்றனர். அதேபோல அணியின் கேப்டன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

மும்பை அணியை பொருத்த வரை, அந்த அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கில் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதுவும் கடந்த 6 ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் அறிமுக வீரர் அல்சாரி ஜோசப் 12 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்து வரலாறு சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கடந்த மார்ச் 30 ஆம் தேதி இரு அணிகளும் மோதியதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் போட்டியில் மீண்டும் பஞ்சாப் அணி வெற்றி பெறுமா? அல்லது மும்பை அணி பழிதீர்க்குமா? என்று இன்று இரவு தெரிந்துவிடும்.

Trending News