Live: IPL ஏலம் 2019: யார்? எந்த அணிக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார் - முழுவிவரம்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 3.30 மணிக்கு முதல் நடைப்பெற்று வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2018, 08:34 PM IST
Live: IPL ஏலம் 2019: யார்? எந்த அணிக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார் - முழுவிவரம் title=

அடுத்த வருடம் நடைபெறவுள்ள IPL 2019-கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 3.30 மணிக்கு முதல் நடைப்பெற்று வருகிறது. 

70 வீரர்களுக்கான தேடலில், 351 வீரர்கள் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் ஏற்கனவே விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.36.20 கோடியையும், டெல்லி கேப்பிட்டல் அணி ரூ.25.50 கோடியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20.95 கோடியையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.18.15 கோடியையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.15.20 கோடியையும், மும்பை இந்தியன்ஸ் அணி 11.15 கோடியையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி ரூ. 9.70 கோடியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடியையும் கொண்டு இன்று வீரர்களை வாங்க களத்தில் இறங்குகிறது.

IPL 2019 வீரர்கள் ஏலத்தில் நேரலை பதிவு கீழே...


சர்பராஸ் அஹமதை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவரை ரூ. 25 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணியின் இளம் வீரர் ஜெயதேவ் உனாட்கட்டை ரூ 8.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இன்றைய ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியலில் உனாட்கட்டே முதலிடத்தில் உள்ளார்.

 

 


17:07 18-12-2018

 

  • வருண் ஆரோன்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ₹2.40 கோடி விலைக்கு விற்கப்பட்டார்.
  • மோஹித் ஷர்மா; சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ₹5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.

 


16:54 18-12-2018

  • இஷாந்த ஷர்மா; ₹1.10 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்!
  • ஜாதவ் உனகன்ட்; ₹8.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்!
  • இலங்கை வீரர் லஷித் மலீங்கா; மும்பை இந்தியான்ஸ் அணிக்கு விற்கப்பட்டார். விலை ₹2 கோடி
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, ₹4.80 கோடி ரூபாய் விலைக்கு மொஹமது சமி விற்கப்பட்டார்.

16:39 18-12-2018

  • ஜானி பாரிஸ்டௌய், ஐத்ராபாத் சன் ரைசஸ் அணிக்கு ₹2.20 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • நிக்கோலஸ் பூரன்; கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ₹4.20 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • விர்தமின் சாஹா; ஐத்ராபாத் சன் ரைசஸ் அணிக்கு ₹1.20 கோடிக்கு விற்கப்பட்டார்.

16:39 18-12-2018

  • கார்லஸ் பெர்த்வொயிட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ₹5 கோடிக்கு விற்கப்பட்டார்.
  • குருகிராத் மான் பெங்களூரு ராயல் சேலன்சர்ஸ் அணிக்கு ₹50 லட்சத்திற்கு விற்கப்பட்டார்.
  • அக்ஷர் படேல், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ₹5 கோடிக்கு விற்கப்பட்டார்.

  • ₹2 கோடிக்கு ஹனுமன் விஹாரி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.
  • ₹4.20 கோடிக்கு ஷிம்ரன் ஹெட்மையர் பெங்களூரு ராயல் சேலன்சர்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.

Trending News