ஐபிஎல் 2017: குஜராத் லயன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்று மோதல்

Last Updated : Apr 18, 2017, 02:21 PM IST
ஐபிஎல் 2017: குஜராத் லயன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்று மோதல் title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ஐபிஎல் போட்டியின் 20-வது ‘லீக்’ ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. புனே அணியை 7 விக்கெட்டில் வென்றது. 

பெங்களூர் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் குஜராத் அணி உள்ளது. பெங்களூர் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. 

இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூர் அணி 2 ஆட்டத்திலும், குஜராத் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே தோல்வியை தவிர்த்து வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News