ஐபிஎல் 2017: 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

Last Updated : May 13, 2017, 08:55 AM IST
ஐபிஎல் 2017: 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி title=

நேற்றைய இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்த போட்டியில் ரைசிங் புனே அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட் அணி களமிறங்கியது. இறுதியாக புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து டெல்லி அணியிடம் தோல்வியுற்றது.

Trending News