இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டியில் மொகாலியில் நடைபெற்றது. டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு இது முதல் டெஸ்ட். முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100வது டெஸ்ட். டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோலி 100 ரன்கள் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டர் ஜடேஜா பேட்டிங்கில் ஜொலித்தார். 2வது சதத்தை நிறைவு செய்த அவர், 175 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
மேலும் படிக்க | சச்சினின் அரிய சாதனையை சமன் செய்த மிதாலி
@ImRo45 begins his Test captaincy stint with a win as #TeamIndia beat Sri Lanka by an innings & runs in the first @Paytm #INDvSL Test in Mohali.
Scorecard https://t.co/XaUgOQVg3O pic.twitter.com/P8HkQSgym3
(@BCCI) March 6, 2022
அவர் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி 574 ரன்களில் டிக்ளோர் செய்தது. இதற்கு கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டை ரசிகர்கள் திட்டித் தீர்த்த நிலையில், நான் தான் டிக்ளோர் செய்ய கூறியதாக ஜடேஜா தெரிவித்தார். அஸ்வின் 61 ரன்கள் எடுத்த நிலையில், பந்துவீச்சிலும் ஜடேஜாவுடன் சேர்ந்து கலக்கினார். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனால், முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய அந்த அணி மீண்டும் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து. 2வது இன்னிங்ஸில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் டாப் 10க்குள் நுழைந்தார். இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவின் 434 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இதுவரை 435 விக்கெட்டுகளை டெஸ்டில் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒட்டுமொத்தமாக 9வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங்கில் 175 ரன்களும், பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் எடுத்து சிறப்பாக செயல்பட்ட ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. மொகாலியில் 2015, 2016 மற்றும் இப்போது நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது பெற்றவர் ரவீந்திர ஜடேஜா. மேலும், ரோகித் சர்மா இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் விளையாடிய 11 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க | வார்னேவால் இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர்? ராக்ஸ்டார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR