Ind Vs SL முதல் ஒரு நாள்: இலங்கை பந்துவீச்சில் தத்தளித்த இந்திய அணி!!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று இமாச்சலப்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் நடக்கிறது.

Last Updated : Dec 10, 2017, 03:02 PM IST
Ind Vs SL முதல் ஒரு நாள்: இலங்கை பந்துவீச்சில் தத்தளித்த இந்திய அணி!!  title=

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று இமாச்சலப்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசரா பெரேரா பௌலிங் தேர்வு செய்தார். இந்திய ஒரு நாள் அணிக்கு ரோகித் முதல் முறையாக கேப்டனாக களமிறங்கினார். 

இந்திய அணியில் ரகானே நீக்கப்பட்டதால் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

முதலில் களமிறங்கிய ஷிகர் (0) மற்றும் ரோகித் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை பவுலர்களின் பந்துவீச்சில் இந்திய அணியில் அனைவரும் மாறி மாறி ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் ரன் எடுக்காமல் திரும்பினார். மணிஷ் பாண்டேவை (2) வெளியேறினார்.

அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா (1௦) அணியை கைவிட்டார். சக வீரர்கள் வழியில், புவனேஷ்வரும் (0) திரும்பினார். பின், இணைந்த தோனி 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். குல்தீப் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சித் சுழலில் பும்ரா டக் அவுட்டானார். சகால் (0) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்நிலையில் இறுதியில் 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக டோனி 65 ரன்கள் எடுத்தார். 

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது. 

Trending News