20 ஓவர் முடிவில் 2_வது டி-20 போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி வெற்றி பெற 261 ரன்கள் தேவை. இலங்கை தரப்பில் நுவன் பிரதீப் மற்றும் திசரா பெரேரா தலா இரண்டு விக்கெட்டும், துஷ்மந்த சேமேரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
#INDvSL: India set a target of 261 for Sri Lanka.
— ANI (@ANI) December 22, 2017
இந்திய அணி தனது 5_வது விக்கெட்டை இழந்தது. தோனி 28(21) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.
இந்திய அணி தனது 4_வது விக்கெட்டை இழந்தது. ஷிரியாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனர்.
இந்திய அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. ஹர்திக் பாண்டியா 10(3) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.
ஓவர்:19 ; இந்தியா 253/3 ; தோனி 27(19) ; ஹர்திக் பாண்டியா 10(3) ரன்-ரேட்: 13.32
இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. கே.எல். ராகுல் 89(49) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.
ஓவர்:18 ; இந்தியா 236/1 ; கே.எல். ராகுல் 83(47) ; எம்.எஸ். தோனி 26(18) ரன்-ரேட்: 13.11
ஓவர்:17 ; இந்தியா 223/1 ; கே.எல். ராகுல் 71(42) ; எம்.எஸ். தோனி 25(17) ரன்-ரேட்: 13.12
ஓவர்:16 ; இந்தியா 202/1 ; கே.எல். ராகுல் 65(41) ; எம்.எஸ். தோனி 12(12) ரன்-ரேட்: 12.62
ஓவர்:15 ; இந்தியா 196/1 ; கே.எல். ராகுல் 62(38) ; எம்.எஸ். தோனி 12(9) ரன்-ரேட்: 13.07
தனது அரை சதத்தை பூர்த்தி செய்த கே.எல். ராகுல் 51(35). இவர் டி-20 போட்டியில் தனது மூன்றாவது அரை சதத்தை நிரப்பினார்
ஓவர்:14 ; இந்தியா 177/1 ; கே.எல். ராகுல் 47(33) ; எம்.எஸ். தோனி 11(7) ரன்-ரேட்: 12.64
ஓவர்:13 ; இந்தியா 165/1 ; கே.எல். ராகுல் 46(33) ; எம்.எஸ். தோனி 1(2) ரன்-ரேட்: 12.77
இந்திய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. ரோஹித் சர்மா 118(43) ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.
ஓவர்:12 ; இந்தியா 149/0 ; ரோஹித் சர்மா 102(39) கே.எல். ராகுல் 46(33) ; ரன்-ரேட்: 12.42
தனது 2_வது சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா. வெறும் 35 பந்துகளில் 101* ரன்கள் எடுத்தார்.
இந்தியா 143/0 ; ரோஹித் சர்மா 97(33) கே.எல். ராகுல் 45(32) ; ரன்-ரேட்: 13
ஓவர்:10 ; இந்தியா 117/0 ; ரோஹித் சர்மா 73(29) கே.எல். ராகுல் 44(31) ; ரன்-ரேட்: 11.7
ஓவர்:9 ; இந்தியா 108/0 ; ரோஹித் சர்மா 67(26) கே.எல். ராகுல் 41(28) ; ரன்-ரேட்: 12
சிக்சர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா 53(23). இது இவரது 13_வது அரை சதமாகும். இந்தியா அணியின் ஸ்கோர் 94/0.
ஓவர்:8 ; இந்தியா 87/0 ; ரோஹித் சர்மா 47(22) கே.எல். ராகுல் 40(26) ; ரன்-ரேட்: 10.88
ஓவர்:7 ; இந்தியா 71/0 ; ரோஹித் சர்மா 38(19) கே.எல். ராகுல் 33(23) ; ரன்-ரேட்: 10.14
ஓவர்:6 ; இந்தியா 59/0 ; ரோஹித் சர்மா 32(16) கே.எல். ராகுல் 27(20)
ஓவர்:5 ; இந்தியா 43/0 ; ரோஹித் சர்மா 17(11) கே.எல். ராகுல் 26(19) ; ரன்-ரேட்: 8.6
ஓவர்:4 ; இந்தியா 26/0 ; ரோஹித் சர்மா 10(8) கே.எல். ராகுல் 16(16) ; ரன்-ரேட்: 6.5
ஓவர்:3 ; இந்தியா 18/0 ; ரோஹித் சர்மா 10(8) கே.எல். ராகுல் 8(10) ; ரன்-ரேட்: 6
ஓவர்:2 ; இந்தியா 15/0 ; ரோஹித் சர்மா 9(7) கே.எல். ராகுல் 6(5) ; ரன்-ரேட்: 7.5
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் களம் இறங்கினர்.
ஓவர்(1) ; இந்தியா 8/0 ; ரோஹித் சர்மா 8(6) ; கே.எல். ராகுல் 0(1) ; ரன்-ரேட்: 8
இரவு 7 மணிக்கு நடைபெற உள்ள இலங்கை-இந்தியா மோதும் 2_வது டி-20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பீலிடிங்கை தேர்வு செய்துள்ளது. சற்று நேரத்தில் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்க உள்ளது.
Sri Lanka have won the toss and will bowl first. #TeamIndia are unchanged for the 2nd T20I #INDvSL pic.twitter.com/9QTyaIGERH
— BCCI (@BCCI) December 22, 2017
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.
முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. பின்னர் இந்தியா - இலங்கை அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் போட்டிகளிலும் இந்தியா 2-1 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது.
தற்போது இந்தியா - இலங்கை மோதும் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று 2_வது டி-20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. 2_வது டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியை பொருத்த வரை டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும், டி-20 தொடரின் முதல் போட்டியையும் வென்று உற்சாகமாக உள்ளனர். அதேவேளையில் இலங்கை அணியினர் தொடர் தோல்வியால் மனதளவில் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே இன்றைய போட்டியை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.