IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ? - முழு விவரம்

IPL 2024 Recap: 2024 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 27, 2024, 01:53 PM IST
  • கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் திருவிழா நடைபெற்றது.
  • மொத்தம் 74 ரன்கள் அடிக்கப்பட்டது.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ? - முழு விவரம் title=

IPL 2024 Recap: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் 70 லீக் சுற்று போட்டிகள், 4 பிளே ஆப் சுற்று போட்டிகள் என மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றது. தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மூன்றாவது ஐபிஎல் கோப்பையாகும். 2012 மற்றும் 2014 சீசனுக்கு பின் 10 ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி சாம்பியனாகி உள்ளது. குறிப்பாக, நேற்றைய இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் கொல்கத்தா அணி முதல்முறையாக 2012ஆம் ஆண்டில் கோப்பையை கைப்பற்றியது. தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்றிருக்கிறது. 

சிறந்த வீரர்...

2012ஆம் ஆண்டில் கம்பீர் கேப்டனாக இருந்த நிலையில், சுனில் நரைன் இளம் பந்துவீச்சாளராக இருந்தார். தற்போது கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருக்கும் நிலையில், சுனில் நரைன் ஒரு மூத்த பந்துவீச்சாளராக இருந்து கோப்பையை வெல்ல ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், சுனில் நரைன் 2024 ஐபிஎல் சீசனின் மிகுந்த மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருதையும் கைப்பற்றியுள்ளார். சுனில் நரைன் இந்த விருதை மூன்றாவது முறையாக பெறுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 2024 ஐபிஎல் சீசன் நிறைவு விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டன, அதன் பரிசுத்தொகை என்ன ஆகிய விவரங்களை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | Kavya Maran ; காவ்யா மாறனை அழ வச்சு கப் அடிச்ச கேகேஆர்..! சாபம் விடும் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்

2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.50 கோடியும் பெற்றன. அதேபோல், மூன்றாவது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி ரூ.7 கோடியும், பெங்களூரு அணி 6.5 கோடியும் பெற்றன. குறிப்பாக இந்த சீசனில் மொத்தம் ரூ.46.5 கோடிக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. 

விருதுகளும் பரிசுகளும்...

- 2024 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை அடித்து Orange Cap விருதை பெற்ற ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 741 ரன்களை இந்த தொடரில் குவித்தார். இந்த விருதை இரண்டாவது முறையாக வெல்கிறார். அந்த வகையில் இந்த விருதை இரண்டு முறை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

- 2024 ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி Purple Cap விருதை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்ஷல் படேலுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. அவர் இந்த சீசனில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார். 2021 சீசனில் ஆர்சிபி அணிக்காக 32 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்ஷல் படேல் அப்போது Purple Cap விருதை வென்றார்.  

- 2024 ஐபிஎல் சீசனில் மிகுந்த மதிப்பு வாய்ந்த வீரருக்கு வழங்கப்படும் Most Valuable Player விருதை வென்ற கேகேஆர் வீரர் சுனில் நரைனுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கு இந்த விருதை 2012 மற்றும் 2018 சீசனில் சுனில் நரைன் வென்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கேகேஆர் சாம்பியன்... சந்தோஷத்தில் கம்பீருக்கு முத்த பரிசு கொடுத்த ஷாருக்கான்! ஓடி வந்து கேட்ட ரிங்கு சிங்

- 2024 ஐபிஎல் சீசனில் அதிக பேன்ட்ஸி புள்ளிகள் பெற்று Ultimate Fantasy Player Of The Season விருதை கேகேஆர் வீரர் சுனில் நரைன் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. 

- 2024 ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வளர்ந்து வரும் இளம் வீரருக்கு வழங்கப்படும் Emerging Player Of The Season விருதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நிதிஷ் குமார் ரெட்டி வென்றார். இவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவர் 13 போட்டிகளில் விளையாடி 303 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடக்கம். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 

- 2024 ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்து Most Sixes விருதை சன்ரைசர்ஸை ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா வென்றார். அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 42 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

- 2024 ஐபிஎல் சீசனில் அதிக பவுண்டரிகளை அடித்து Most Fours விருதை சன்ரைசர்ஸை ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் வென்றார். அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 64 பவுண்டரிகளை அடித்துள்ளார். 

- 2024 ஐபிஎல் சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து Best Strike Rate விருதை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் பிரேசர் மெக்கர்க் வென்றார். அவருக்கும் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 234.04 ஆகும். அவர் 9 போட்டிகளில் விளையாடி 330 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடக்கம். குறிப்பாக அவர் 32 பவுண்டரிகளையும், 28 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். அதாவது இவர் அடித்த மொத்தம் 330 ரன்களில் 296 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்துள்ளது. வெறும் 34 ரன்களை மட்டுமே 9 போட்டிகளில் பவுண்டரிகள் இல்லாமல் அடித்துள்ளார்.

- 2024 ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்சை பிடித்து Catch Of The Season விருதை கொல்கத்தா அணி வீரர் ரமன்தீப் சிங் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் விருது வழங்கப்பட்டது. 

- 2024 ஐபிஎல் சீசனில் மிகவும் கண்ணியமாக விளையாடிய அணிக்கு வழங்கப்படும் Fair Play விருதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. அந்த அணிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. 

- 2024 ஐபிஎல் சீசனில் சிறந்த ஆடுகளம் மற்றும் மைதான பராமரிப்புக்கு வழங்கப்படும் Pitch and Ground விருதை ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானம் வென்றது. இதற்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்... ராஜஸ்தான் ராயல்ஸ் ரிலீஸ் செய்யப்போகும் 5 முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News