ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு - ஏப்ரல் 5-ம் தேதி தொடக்கம்

Last Updated : Feb 16, 2017, 01:01 PM IST
ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு - ஏப்ரல் 5-ம் தேதி தொடக்கம் title=

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 10-வது தொடர் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. 

முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கடைசி தொடரில் 2-வது இடம் பிடித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது.

47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன. இறுதிப் போட்டி ஐதராபாத்தில் மே மாதம் 21-ம் தேதி நடைபெறும். இந்த தொடர்கான வீரர்களின் ஏலம் வரும் 20-ம் தேதி நடக்கயிருக்கிறது.

 

 

Trending News