FIFA: தரப்பட்டியலில் முன்னேறியது இந்திய கால்பந்து அணி! புதிய பட்டியலில் 101வது இடம்

FIFA Rankings: இந்திய ஆண்கள் கால்பந்து அணி சமீபத்திய ஃபிஃபா தரவரிசையில் 101 வது இடத்தில் உள்ளது. மியான்மர் மற்றும் கிர்கிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய வெற்றிகளின் காரணமாக ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 7, 2023, 09:03 PM IST
  • 5 இடங்கள் முன்னேறிய இந்திய கால்பந்து அணி
  • இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் முன்னேற்றம்
  • ஃபீபா தரவரிசையில் இந்தியா முன்னேறியது
FIFA: தரப்பட்டியலில் முன்னேறியது இந்திய கால்பந்து அணி! புதிய பட்டியலில் 101வது இடம் title=

1200.66 புள்ளிகளுடன், இந்திய ஆண்கள் கால்பந்து அணி சமீபத்திய ஃபிஃபா தரவரிசையில் 101 வது இடத்தில் உள்ளது. மியான்மர் மற்றும் கிர்கிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய வெற்றிகளின் காரணமாக ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. கால்பந்து அமைப்பு ஃபிஃபா, வியாழன் அன்று அதன் சமீபத்திய தரவரிசையை வெளியிட்டது.

அர்ஜென்டினா சமீபத்திய நட்பு போட்டிகளில் வெற்றி மற்றும் கடந்த ஆண்டு உலகக் கோப்பை வென்றதன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், பிரேசில் முதல் இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முதல் பத்து இடங்களில் 4வது இடத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியும் 8.57 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முத்தரப்பு போட்டியில் மியான்மர் மற்றும் கிர்கிஸ்தானுக்கு எதிராக அவர்கள் வெற்றி பெற்று தரவரிசையில் 101வது இடத்திற்கு முன்னேறினர். இந்தியா இதற்கு முன் 106வது இடத்தில் இருந்தது.

கடந்த மாதம் இம்பாலில் கிர்கிஸ்தானுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா மியான்மரை வென்றது, இது முக்கியமான புள்ளிகளைப் பெற உதவியது. சமீபத்திய தரவரிசைக்குப் பிறகு, இந்தியா இப்போது நியூசிலாந்து அடுத்த இடத்தையும் மற்றும் கென்யாவுக்கு முந்தைய இடத்தையும் பிடித்துள்ளது.

மேலும் படிக்க | அணி மாறுகிறாரா 36 வயது கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி? சாத்தியங்களும் நிதர்சனமும்

இந்தியா மொத்தம் 1200.66 புள்ளிகளுடன் 46 ஆசிய நாடுகளில் 19வது இடத்தில் உள்ளது. அனைத்து ஆசிய நாடுகளிலும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. தரவரிசைப்படி உலகின் 20வது சிறந்த அணியாக ஜப்பான் உள்ளது.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன், தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறியதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வெற்றியைப் பெற அணி கடினமாக உழைத்து வருவதாக ட்விட்டரில் எழுதினார்.

 

"சமீபத்திய FIFA தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தைப் பிடித்துள்ளது. அணிக்கு பின்னால் இருக்கும் குழு கடினமாக உழைத்துக்கொண்டே இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை, நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு அணி சாதனை நிலைக்கு உயரும்" என்று அவர் எழுதினார்.

மேலும் படிக்க | மும்பை அணி ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி - நீடா அம்பானியின் முடிவால் அதிர்ச்சி 

FIFA தரவரிசையில் இந்தியாவின் சிறந்த தரவரிசை எது?
ஃபிஃபா தரவரிசையில் இந்தியா முதல் 100 இடங்களுக்குள் நுழைவது அரிது. கடைசியாக அவர்கள் முதல் 100 பட்டியலில் நுழைந்தது 1996 இல். அந்த ஆண்டில், இந்தியா 94 வது இடத்தில் இருந்தது. இந்திய மகளிர் கால்பந்து அணி தற்போது ஃபிஃபா தரவரிசையில் 61வது இடத்தில் உள்ளது.

FIFA தரவரிசை அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
2018 இல், FIFA 'SUM' என்ற புதிய தரவரிசை முறையை ஏற்றுக்கொண்டது. இந்த அமைப்பின்படி, உலக அமைப்பு ஒரு ஆட்டத்திற்குப் பிறகு வென்ற அல்லது இழந்த புள்ளிகளை, முந்தைய புள்ளிகளின் மொத்தத்தில் சேர்க்கிறது அல்லது கழிக்கிறது. முந்தைய மாடலில், இது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சராசரியாக பெற்ற விளையாட்டு புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

"சேர்க்கப்படும் அல்லது கழிக்கப்படும் புள்ளிகள் இரண்டு போட்டியாளர்களின் ஒப்பீட்டு வலிமையால் ஓரளவு தீர்மானிக்கப்படுகின்றன, தரவரிசையில் உயர்ந்த அணிகள் தரவரிசையில் குறைந்த அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற தர்க்கரீதியான எதிர்பார்ப்பு உட்பட" என்று FIFA கூறுகிறது. .

மேலும் படிக்க | 'ரன் அடிக்கிறதே இல்லை.. இவர ஏன் எடுக்கிறாங்க?' கொல்கத்தா வீரரை விளாசிய கவாஸ்கர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News