ஆன்மிக வழியில் ஷிகர் தவான்... ஜிம்பாப்வே தொடரில் நிகழ்ந்த மாற்றம்

ஆன்மிகமும், புல்லாங்குழலும் மன அமைதியை கொடுப்பதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 17, 2022, 07:21 PM IST
  • இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரர்களில் தவான் ஒருவர்
  • ஜிம்பாப்வே தொடரில் தவான் துணை கேப்டன்
  • முதல் ஒருநாள் போட்டி நாளை தொடக்கம்
ஆன்மிக வழியில் ஷிகர் தவான்... ஜிம்பாப்வே தொடரில் நிகழ்ந்த மாற்றம் title=

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஹராரேயில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தவான், “ஜிம்பாப்வே தொடரில் ஷுப்மன் கில், ஆவேஷ் கான், இஷான் கிஷன் உள்ளிட்ட இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றேன். கிரிக்கெட் தொடர்பாக எந்த சந்தேகம் கேட்டாலும் விளக்கம் அளிப்பேன். என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இப்போதைய இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடுகின்றனர். ஆட்ட நுட்பத்திலும் நுணுக்கத்திலும் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் உள்நாட்டுப் போட்டிகள், ஐபிஎல் போட்டிகளில் உள்ள அமைப்பை நன்றாகப் பயன்படுத்தியுள்ளனர்.

Dhawan

கே.எல். ராகுலுக்கு இந்த ஜிம்பாப்வே தொடர் ஒரு பாடமாக அமையும். இந்தத் தொடரில் நானும் ரன்கள் அடிக்க விரும்புகிறேன். ஜிம்பாப்வே அணியினர் இதற்கு முந்தைய தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளனர். அதனால் அந்த அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. பேட்டிங்கில் அந்நாட்டின் சிகந்தர் ரசா சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அவரை விரைவில் ஆட்டமிழக்க செய்ய பௌலர்கள் உத்திகளை வகுக்க வேண்டும். 

மேலும் படிக்க | CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்! ரெய்னாவை சேர்க்க திட்டம்!

கிரிக்கெட்டில் பிரகாசிக்க பயிற்சி அவசியம் என்பது போல் மன அமைதிக்கும் பயிற்சி அவசியம். இதனால்தான் ஆன்மிகத்திலும் இசையிலும் நாட்டம் செலுத்தி வருகிறேன், புல்லாங்குழல் வாசிக்க எனக்குப் பிடிக்கும். இதனால் மன அமைதி கிடைக்கிறது.

நெகட்டிவ் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் எப்போதும் தன்னம்பிக்கையூட்டும் விஷயங்களையே யோசிப்பேன், இளம் தலைமுறையினருக்கும் இதைத்தான் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன்” என்றார். முன்னதாக, காயத்தால் வெளியேறிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இளம் வீரர் ஷாபாஸ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News