Commonwealth Games 2022: காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடர் முதிவதற்கு முன், இந்தியா பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரும், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ராவிடம் இருந்து மேலும் பதக்கத்தை இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அவருக்கு காயம் ஏற்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில், நீரஜ் சோப்ராவுநக்கு தனது தொடையில் ஒரு கட்டு கட்டியிருப்பது தெரியவந்துள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக தடகள சாம்பியன்ஷிப் 2022 இல் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும். முன்னதாக அஞ்சு பாபி ஜார்ஜ் இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 2003ல் அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
காயம் காரணமாக நீரஜ் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இல்லை என்று இந்திய தடகள கூட்டமைப்பு இன்று காலை தெரிவித்தது. அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதால், ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகு, ஒரு மாதம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் விளைவாக, அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று மேத்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ