நம்முடைய டிரஸ்ஸை கண்டுபிடிப்பது எப்படி? உலகிற்கே எடுத்து கூறிய அஸ்வின்!

டி 20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடைகளை முகர்ந்து பார்த்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2022, 12:09 PM IST
  • ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி.
  • அரையிறுதியில் இங்கிலாந்துடன் விளையாட உள்ளது.
  • இதற்கான தீவிர பயிற்சியில் இந்திய அணி உள்ளது.
நம்முடைய டிரஸ்ஸை கண்டுபிடிப்பது எப்படி? உலகிற்கே எடுத்து கூறிய அஸ்வின்! title=

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவு மிக சிறப்பாக விளையாடினார்.  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார்.  இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மைதானத்தில் செய்த செயல் தற்போது வைரல் ஆகி வருகிறது.  இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கேப்டன்கள் மைதானத்தில் பேசும் போது தான் கேமரா பிரேமில் இருப்பதை அறியாத அஷ்வின், தன்னுடைய ஆடை எது என்று கண்டுபிடிக்க துணியை முகர்ந்து பார்த்தார். 

மேலும் படிக்க | ரோஹித் சர்மா காயம்! உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்?

 

அவர் இருந்த இடத்தில் இரண்டு ஜெர்சிகள் இருந்த நிலையில் தன்னுடையது எது என்பதை கண்டுபிடிக்க இவ்வாறு செய்தார்.  "உங்கள் ஆடைகளைக் கண்டறிய இதுவே சரியான வழி" என்று ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.  இந்த வீடியோ தற்போது மில்லியன் வியூஸ் சென்று வைரல் ஆகி வருகிறது.  

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது இந்திய அணி. பிறகு ஆடிய ஜிம்பாப்வே அணி 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பவுலிங்கில் ஜிம்பாப்வேயை கட்டுப்படுத்தியது.  முகமது ஷமியும் தனது வேகத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் முதல் அரையிறுதியில் விளையாட உள்ளது. இறுதிப் போட்டியில் இடம் பிடிக்கும் முயற்சியில் இந்தியா வியாழன் அன்று இங்கிலாந்துடன் மோதுகிறது.

மேலும் படிக்க | இந்த 5 வீரர்களுக்காக அடித்துக்கொள்ளும் MI மற்றும் CSK! யார் அவர்கள்?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News