இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களுருவில் பகலிரவு போட்டியாக இன்று தொடங்க உள்ளது. இப்போட்டியில், முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய சில வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா நீக்க முடிவு செய்துள்ளார். அதனால், யார் யார் நீக்கப்படலாம் என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க | இந்தியாவில் நடைபெறப்போகும் 3 உலக கோப்பை போட்டிகள்!
ஓபனிங் பேட்ஸ்மேன்
முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய மயங்க் அகர்வால் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் பேட்டிங் செய்திருந்தாலும், அதில் அவர் எதிர்பார்த்த ரன் எடுக்காததால் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக சுப்மான் கில் களமிறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 3வது இடத்தில் ஹனுமா விஹாரி மற்றும் 4வது இடத்தில் விராட் கோலி இறங்குவதில் மாற்றம் இருக்காது.
மேலும் படிக்க | ரோகித் கூறிய ஒரு ’பாயிண்ட்’ - கேப்டன்ஷிப்பை இழந்த விராட்
மிடில் ஆர்டர்
சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் 5வது இடத்தில் களமிறங்குவார். அதேபோல், முதல் டெஸ்டில் அதிரடியாக விளையாடி 96 ரன்கள் குவித்த ரிஷப் பன்ட் வழக்கம்போல் 6வது இடத்தில் இறங்குவார். இவர்களுக்கான இடத்தில் மாற்றம் இருக்க வாய்ப்புகள் இல்லை. விக்கெட் கீப்பிங்கிலும் பன்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
பந்துவீச்சு
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அனைவரது புருவத்தையும் உயர வைத்த ஜடேஜாவுக்கு கடந்த போட்டியில் கொடுத்த முக்கியத்துவத்தைப்போல் இந்த போட்டியிலும் கொடுக்க ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்ததுடன், 175 ரன்கள் விளாசினார். அஸ்வினுக்கும் வாய்ப்பு உண்டு. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். முகமது சமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இந்தியாவின் உத்தேச அணி
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR