4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா அணி தோல்வி!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒருநாள் போட்டியில் நேற்று 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

Last Updated : Oct 27, 2016, 08:40 AM IST
4-வது ஒரு நாள் போட்டி: இந்தியா அணி தோல்வி!! title=

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒருநாள் போட்டியில் நேற்று 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இப்போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்றது. இதனையடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. பின்னர் 261 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிஙற்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. 

முதல் 10 ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம் என்று இந்திய கேப்டன் டோனி தோல்விக்கு பிறகு கூறினார். 

Trending News