India vs New Zealand முதல் ஒருநாள் இன்று: சில முக்கிய குறிப்புகள்!

Last Updated : Oct 22, 2017, 11:33 AM IST
India vs New Zealand முதல் ஒருநாள் இன்று: சில முக்கிய குறிப்புகள்! title=

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ளது. 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த ஒருநாள் தொடரில் 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றதால், இந்திய அணி  வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். 

போட்டியின் சில தகவல்கள்:-

போட்டி தேதி: 22 அக்டோபர் 2017
போட்டி நேரம்: போட்டி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். டாஸ் மதியம்  1 மணியளவில்
போட்டி நடக்கும் இடம்:         மும்பை வான்கடே மைதானம்
நேரடி ஒளிபரப்பு  (இனையத்தில்): இந்த போட்டியில் Hotstar.com -இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
நேரடி ஒளிபரப்பு (தொலைக்காட்சி): நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்கலாம்

ஒருநாள் தொடரின் முழு அட்டவணை:

முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 22 (ஞாயிற்றுக்கிழமை) வான்கடே ஸ்டேடியம், மும்பை.

இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 25 (புதன்கிழமை) MCA ஸ்டேடியம், புனே.

மூன்றாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 29 (ஞாயிற்றுக்கிழமை) கிரீன் பார்க் ஸ்டேடியம், கான்பூர்.

அணிகள் விவரம்:-

இந்தியா அணிகள்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்

நியூசிலாந்து அணிகள்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், மேத்யூ ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்க்கர், ஈஷ் சோதி.

Trending News