வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, உலகக்கோப்பைக்கு பின் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
சென்ற வாரம் நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை இந்திய இழந்திருந்தது, அதில் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டார். தற்போது, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் இணைந்துள்ளதால், இந்திய அணி பலம்பெற்றுள்ளது.
இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் நாளை இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதை முன்னிட்டு இந்திய அணி வீரர்கள் வங்கதேசத்தை வந்தடைந்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தான் வங்கதேசத்திற்கு பயணித்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில்,"மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மிக மோசமான பயண அனுபவத்தை பெற்றோம். முதலில், அவர்கள் எங்களிடம் சொல்லாமல் விமானத்தை மாற்றினார்கள்.
Had a worse experience traveling with Malaysia airlines @MAS .first they changed our flight without telling us and no food in Business class now we have been waiting for our luggage from last 24hours .imagine we have a game to play tomorrow #worse #experience #flyingcar
— Deepak chahar (@deepak_chahar9) December 3, 2022
மேலும் படிக்க | ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி
பின்னர், பிஸ்னஸ் கிளாஸில் உணவு இல்லை என்றனர். இப்போது, கடந்த 24 மணிநேரமாக எங்களின் உடைமைகளுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். நினைத்துப்பாருங்கள், நாளைக்கு எங்களுக்கு போட்டி இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதனை இன்று காலை 8.29 மணியளவில் தீபக் சஹார் பதிவிட்ட நிலையில், அதற்கு சில நடைமுறை காரணங்களாலும், வானிலை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் இந்த பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்" என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பதிலளித்திருந்தது. தொடர்ந்து, ஒரு விண்ணப்பத்தை நிரப்பும் படியும் கூறியது.
ஆனால், அந்த விண்ணப்பத்தின் லின்க் உபயோகத்தில் இல்லை என தீபக் சஹார் பதிலளித்தார். தொடர்ந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பதிலளித்து வந்தாலும், அதில் தீபக் சஹார் கூறும் பிரச்னையின் தீவிரம் அவர்களின் பதில்களில் தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, சிலரோ மலேசியன் ஏர்லைன்ஸ் அதனின் விமானத்தையே தொலைத்துவிட்டது, இது அதைவிட பெரிய பிரச்னை இல்லை என நகைச்சுவையாக கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய மலேசிய ஏர்லைன் விமானம் 370, வானில் மாயமான நிலையில், இன்று வரை அதுகுறித்து எந்த தகவல்களும் இல்லை. இதைதான் ரசிகர்களும் தங்களின் கருத்துகளில் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த விமானத்தில் மொ்தம் 227 பயணிகள், 12 பணியாளர்கள் இருந்ததது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | INDvsBAN: மீண்டும் முக்கிய வீரர் காயம்! தொடரில் இருந்து விலகல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ