இந்தியா-வங்காளதேசம், 2-வது நாள்: வங்காளதேசம் 41/1, இந்தியா 687/6

வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.

Last Updated : Feb 10, 2017, 05:02 PM IST
 இந்தியா-வங்காளதேசம், 2-வது நாள்: வங்காளதேசம் 41/1, இந்தியா 687/6 title=

ஐதராபாத்: வங்காளதேச கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில்,  90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட்கோலி 141 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 111 ரன்னும், ரஹானே 60 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 45 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. விராட் கோலி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரஹானே 82 ரன்களில் ஆட்டமிழந்த போதும், விராட் கோலி சீரான ஆட்டத்தால் இந்தியா அணி ரன்கள் குவித்தது. உணவு இடை வேளையின் போது 191 ரன்களுடன் களத்தில் இருந்த விராட் கோலி, உணவு இடைவேளை முடிந்ததும் விராட் கோலி இரட்டை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அடுத்து வந்த சகா சிறப்பாக விளையாடி சதமும், ஜடேஜா 60 ரன்னும் எடுக்க இந்தியா 166 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சகா 106 ரன்னுடனும், ஜடேஜா 60 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். வங்காள தேச அணி சார்பில் அதிகபட்சமாக தைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்தியாவை தொடர்ந்து விளையாட ஆரமித்த வங்காளதேசம் தமிம், சர்க்கார் விளையாட தொடங்கினர். சவுமிய சர்க்கார் 15 ரன் குவித்து அவுட்டானார். பின்னர் அதை தொடர்து விளையாடிய தமிம் (24) மற்றும் ஹக் (1) முதல் நாள் இன்னிங்சை முடித்து மொத்தம் 41 ரன் குவித்து நாளை இந்த ஆட்டத்தை தொடர உள்ளது.

Trending News