India vs Australia: விராட் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார் கௌதம் கம்பீர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெகு சுலபமான வெற்றிகளைப் பதிவு செய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2020, 02:29 PM IST
  • இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
  • மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரை ஆஸ்திரேலியா வென்றது.
  • இந்திய அணியின் ஆட்டம் குறித்தும், கேப்டன்சி குறித்தும் கௌதம் கம்பீர் விமர்சனம்.
India vs Australia: விராட் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார் கௌதம் கம்பீர் title=

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரை வென்றது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா (Australia) ஒரு சுலபமான வெற்றியைப் பதிவுசெய்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா மீது ஆஸ்திரேலியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டு போட்டிகளிலும் 370 ரன்களுக்கு மேல் அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை தவிடுபொடியாக்கினர் என்றே கூற வேண்டும்.

இந்தியாவின் (India) தொடர்ச்சியான இரு தோல்விகளுக்கு பின்னர், அனைவரின் பார்வையும் இந்திய கேப்டன் விராட் கோலியின் (Virat Kohli) பக்கம் திரும்பியுள்ளது. கோலி, அணியை சரியாக வழிநடத்த தவறியதாக, இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் கோலியை அவதூறாக பேசியுள்ளார்.

"உண்மையாக சொல்ல வேண்டுமானால், கேப்டன் பதவியில் எடுக்கப்பட்ட முடிவுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விக்கெட்டுகளை பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த வகையான அதிரடி பேட்டிங் வரிசையை நீங்கள் நிறுத்த வேண்டுமானால், உங்கள் முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ந்து ஓவர்களை அளிக்க வெண்டும்." என கௌதம் கம்பீர் (Gautham Gambhir) ESPNCricinfo இல் வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.

"பொதுவாக, ஒரு நாள் ஆட்டத்தில் (ODI), மூன்று ஸ்பெல்கள் இருக்கும். இந்த ஸ்பெல்களில் பௌலர்கள் தங்கள் 10 ஓவர்களை முடிப்பார்கள். ஆனால் இரண்டு ஓவர்களை வீசிய பிறகு உங்கள் முதன்மை பௌலர்களை நீங்கள் நிறுத்திவிட்டால், அது எந்த வகையான கேப்டன்சி என எனக்கு புரியவில்லை, என்னால் அதை விவரிக்கவும் முடியவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: Australia vs India: எதிரும் புதிருமாய் களத்தில் இருந்தாலும் காதல் களம் ஒன்றே

ஆறாவது பந்து வீச்சாளரின் சேவை இந்திய அணிக்கு தேவைப்பட்டால், அவர்கள், வாஷிங்டன் சுந்தர் அல்லது சிவம் தூபேக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் என்றும் கம்பீர் கூறினார்.

"அவர்கள் வாஷிங்டன் சுந்தர் அல்லது சிவம் தூபே போன்றவர்களுக்கோ அல்லது அணியில் இருந்த மற்றவர்களுக்கோ அடுத்த ஆட்டத்தை விளையாடுவதற்கு வாய்ப்பளித்து, அவர்கள் ஒரு நாள் போட்டிகளில் எவ்வாறு ஆடுகிறார்கள் என்பதை பார்த்திருக்கலாம். ஆனால் இப்படி சோதித்துப் பார்க்க ஆஸ்திரேலியாவில் யாரும் இல்லாமல் இருப்பது, தேர்வில் செய்யப்பட்ட பிழையாகும். ஒரு வீரரை நீங்கள் சோதித்துப் பார்க்காத வரை, அவர் சர்வதேச மட்டத்தில் எவ்வளவு நன்றாக ஆடுவார் என்பதை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. இப்படி சோதித்துப் பார்க்கத்தக்க வீரர்களை அணி ஆஸ்த்கிரேலியாவுக்கு அழைத்துச் செல்லவில்லை. இது அவர்களுக்கு பெரும் பாதிப்பை எற்படுத்தலாம்.” என்று கம்பீர் கூறினார்.

ALSO READ: AUS vs IND: முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா; 1-0 என முன்னிலை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News