India vs Australia 2nd Test: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெல்லி டெஸ்ட் போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், மீண்டும் ஒரு சாதனையை செய்யவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டுவார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் நடைபெற்றது, இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக மூன்றே நாட்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டட அஸ்வினுக்கு வாய்ப்பு
இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பில் அஸ்வின் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் (Ravichandran Ashwin) முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிப்ரவரி 17 முதல் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர், 100 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும் படிக்க: IND vs AUS: 2வது டெஸ்டில் முக்கிய வீரர் இல்லை! பின்னடைவில் இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட் பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடம்
அனில் கும்ப்ளேவுக்குப் (Anil Kumble) பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பட்டியில் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தை அஸ்வின் அடைவார். அதேநேரத்தில் அனில் கும்ப்ளே பற்றி பேசுகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 டெஸ்ட் போட்டிகளில் 38 இன்னிங்ஸில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம், அஸ்வின் பற்றி பேசினால், அவர் 19 போட்டிகளில் 36 இன்னிங்ஸில் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தின் இயோன் போத்தம் முதலிடம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் 95 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் ஆவார். ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனை இங்கிலாந்தின் இயோன் போத்தம் பெயரில் உள்ளது. போதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 டெஸ்ட் போட்டிகளில் 66 இன்னிங்ஸ்களில் 148 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அஸ்வின் - ஜடேஜாவை எப்படி சமாளிக்கிறதுனே தெரியல: ரோகித் புலம்பல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ