முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 303 ரன்கள் குவிப்பு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கவாது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது!

Last Updated : Jan 3, 2019, 12:49 PM IST
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 303 ரன்கள் குவிப்பு! title=

12:36 03-01-2019
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது!

புஜாரா 130(250), ஹனுமன் விஹாரி 39(58) ரன்களுடன் களத்தில் உள்ளனர்


11:48 03-01-2019

சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 18-வது சதத்தினை பூர்த்தி செய்தார் புஜாரா!

#70.2: WICKET! ரஹானே 18(55) ரன்களுக்கு வெளியேறினார்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 80 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.

புஜாரா 118(228), ஹனுமன் விஹாரி 14(20) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.


10:16 03-01-2019

#Wicket - 52.5 | விராட் கோலி 23(59) ரன்களுக்கு வெளியேறினார்!

தற்போதைய நிலவரப்படி 56 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 70(146), ரஹானே 3(13) ரன்களுடன் களத்தில் உள்ளனர்


09:02 03-01-2019

நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் இந்தியா... இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

#Wicket - 33.6 | மயங்க் அகர்வால் 77(112) ரன்களுக்கு வெளியேறினார்!


07:40 03-01-2019

முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா...

24 ஓவர்கள் - 1 விக்கெட் - 69 ரன்கள்
களத்தில் -- மாயங்க் அகர்வால் 42(79) | சட்டீஸ்வர் புஜாரா 16(59)


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கவாது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றதுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுள்ளது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று (ஜனவரி 3) துவங்க நடைப்பெற்று வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா விளையாடி வருகின்றது.

இந்திய அணியை பொருத்தவரை இப்போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ, டெஸ்ட் தொடரை வென்றுவிடும். இதன்மூலம் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சாதனை படைக்கும்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தை பொருத்த வரை, ஆஸ்திரேலிய அணி 19 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. இந்திய அணி., கடந்த 1977-78 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் (நான்காவது டெஸ்ட்) இன்னிங்ஸ் மற்றும் இரண்டு ரன்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் இந்திய அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி பெறவில்லை. இதையும் மாற்ற இந்திய அணி தயாராகி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. மாயங்க் அகர்வால் 14(27), புஜாரா 12(27) ரன்களுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக ஆட்டத்தின் 1.3-வது பந்தில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (6) ரன்களுக்கு வெளியேறினார்.

Trending News