இஸ்லாமாபாத்: 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. கடந்த சில தினங்களுக்கு முன் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன் நியூஸிலாந்து உளவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் குண்டுவெடிப்பு நடக்க உள்ளதாக தகவல் வந்ததையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி உடனடியாக பாகிஸ்தானை விட்டு வெளியேறியது.
மேலும் அடுத்த ஆண்டு இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருந்தனர். அதனை தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களாக நிறுத்தியுள்ளது. இந்த அசம்பாவிதங்களுக்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள இந்தியா இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாதத்தை முதலில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவது புதிதல்ல. பாகிஸ்தான் முதலில் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை சரி செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சக(MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ஏற்கனவே இது போன்ற பிரச்சனையின் போது கூறினார்.
நியூசிலாந்து அணிக்கு இந்தியாவிலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கூறினார். VPN நெட்வொர்கை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதே கணினியில் 13 பிற மின்னஞ்சலும் இருந்தது கண்டுபடிக்கப்பட்டது. அவை அனைத்தும் இந்திய பெயர்களில் இருந்தன என்று கூறினார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளதாகவும், தெஹ்ரீக்-இ-லப்பைக் புரோட்டான் மெயில் மற்றும் ஹம்ஸா அஃப்ரிடியின் ஐடி பற்றிய உதவி மற்றும் தகவல்களுக்காக இன்டர்போலைக் நாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR