இந்தியா vs ஆஸி., : 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா

Last Updated : Oct 2, 2017, 08:42 AM IST
இந்தியா vs ஆஸி., : 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா title=

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது.

இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் இருந்தது.

5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. 

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி.

> ரஹானே = 74 பந்துகளில் 61 ரன்களை 

> ரோகித் ஷர்மா = 125 ரன்களைக் குவித்தார்.

இந்திய அணி 223 ரன்களை எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட் ஆனார். 

> விராட் கோலி = 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

> ளத்தில் ஜாதவ், மணீஷ் பாண்டே இருந்தனர்.

42.5வது ஓவரில் வெற்றி இலக்கான 243 ரன்களை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை இந்தியா வென்றது. மேலும் ஆட்ட நாயகனாக ரோகித் ஷர்மாவும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  டாஸ் வென்றது. அந்த வகையில் இந்திய அணி 'பவுலிங்' செய்கிறது.

இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-

நேரடி ஒளிபரப்பு (இனையத்தில்) :

இந்த போட்டியில் Hotstar.com -இல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு(தொலைக்காட்சி) :

நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்கலாம்.

போட்டியின் நேரம்:

போட்டி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். டாஸ் மதியம் 1 மணியளவில்.

இரு அணிகளும் இன்று மோதுவது 128-வது போட்டியாகும். இதுவரை நடந்த 127 ஆட்டத்தில் இந்தியா 44-ல், ஆஸ்திரேலியா 73-ல் வெற்றி பெற்றன. 10 போட்டி முடிவு இல்லை.

Trending News