தென்னாப்பிரிக்காவின் ஜொனஸ்பார்க்கில் நடைப்பெற்று வரும் BRICS U-17 கால்பந்து போட்டியில் இந்தியா மகளிர் அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் 25-ஆம் நிமிடத்தில் தென்னாப்பிரிக்கா வீராங்கனைக்கு இந்திய கோல்கீப்பர் அர்ச்சணா ஆறுமுகம் வழிவிட தென்னாப்பிரிக்க தனது மதல் கோலினை பதிவு செய்தது. இதனையடுத்து அடுத்த 15 நிமிடத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு பதிலடி கொடுக்க இந்தியாவின் வன்லால்ஹிரிதாரி முதல் கோலினை பதிவு செய்தார்.
India U-17 girls go down against @Banyana_Banyana in #BRICS2018Games #WeAreIndia #ShePowerhttps://t.co/8c0LwOwCKO pic.twitter.com/h2iiNYf3ea
— Indian Football Team (@IndianFootball) July 18, 2018
ஆட்டத்தின் முதல் பாதி வரையில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்துவந்த நிலையில், இரண்டாம் பாதியில் தொன்னாப்பிரிக்கா அணி அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
இதனையடுத்து இரண்டாம் பாதியில் வெறும் 20 நிமிடங்களில் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து 4 கோல்களினை அடித்தது. இதனால் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 1-5 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது போட்டில் இன்று ரஷ்யாவை எதிர்கொள்கிறது.