ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் - இளம் வீரர் ஷாபாஸுக்கு வாய்ப்பு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் வீரர் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். 

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 17, 2022, 02:55 PM IST
  • ஜிம்பாப்வேவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்றுள்ளது
  • முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது
  • மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது
 ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் - இளம் வீரர் ஷாபாஸுக்கு வாய்ப்பு title=

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஹராரேயில் நடக்கிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக யார் அணியில் சேர்க்கப்படப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. 

 

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் இளம் வீரரான ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பெங்காலை சேர்ந்த ஷாபாஸ் 18 முதல் தர போட்டிகளில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 1041 ரன்கள் எடுத்துள்ளார். 57 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 

Shahbaz Ahmed

ஆல்ரவுண்டரான இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த சீசனின் சில போட்டிகளில் பெங்களூரு அணி இக்கட்டான நிலையில் தத்தளித்தபோது தனது அதிரடி பேட்டிங்கால் அணியை மீட்டார். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் பெங்களூரு அணிக்காக தனது பங்களிப்பை சிறப்பாக செய்தார். 

மேலும் படிக்க | CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்! ரெய்னாவை சேர்க்க திட்டம்!

இதனையடுத்து கடந்த சீசனில் ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்ட வீரராகவும் திகழ்ந்தார். தற்போது இந்திய அணியில் தேர்வாகியிருக்கும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | புரோ கபடி : பவன்குமார் ஷெராவத்தை ரூ.2.26 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தமிழ் தலைவாஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News