Ind vs Sl: முதல் டி20; இந்தியா அபாரம் - இலங்கை படுதோல்வி!

இந்திய அணியின் சார்பில் யதுவேந்திர சஹால் 4, ஹர்தீக் பாண்டியா 3, குல்தீப் யாதவ் 2 மற்றும் உனத்காண்ட் 1 விக்கெட்டைகளை வீழ்த்தினர்.

Last Updated : Dec 21, 2017, 06:03 AM IST
Ind vs Sl: முதல் டி20; இந்தியா அபாரம் - இலங்கை படுதோல்வி! title=

இலங்கை உடனான முதல் டி20 போட்டியில் இந்திய அபார வெற்றி பெற்றுள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 
 
முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்தியா 1-0 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. பின்னர் இந்தியா - இலங்கை அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் போட்டிகளிலும் இந்தியா 2-1 என்று கணக்கில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. 
 
இதனையடுத்து மீதமுள்ள மூன்று டி20 போட்டிகள் நேற்று முதல் துவங்கியது. தொடரின் முதல் போட்டி கட்டாக்கில் உள்ள பராபட்டி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் கேஎல் ராகுல் 61 ரன்களும், தோனி 39 ரன்களும் எடுத்தனர்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்ககுடன் களமிறங்கிய இலங்கை, ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை பறிகொடுக்க 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

 

 

இந்திய அணியின் சார்பில் யதுவேந்திர சஹால் 4, ஹர்தீக் பாண்டியா 3, குல்தீப் யாதவ் 2 மற்றும் உனத்காண்ட் 1 விக்கெட்டைகளை வீழ்த்தினர்.

Trending News