இந்தியா - இலங்கைக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்து உள்ளது. ஷிகர் தவான் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் விஷவா பெர்னாண்டோ பந்தில் கேட்ச் அவுட் ஆனார்.
அதன் பிறகு ரோஹித் சர்மாவுடன் இணைந்த விராட் கோலி இருவரும் நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சதம் அடித்தனர். விராத் கோலி 96 பந்தில் 131 ரன்கள் எடுத்து மலிங்கா பந்தத்தில் அவுட் ஆனார். இது லசித் மலிங்காவின் 300-ராவது விக்கெட் ஆகும்.
ரோஹித் சர்மா 88 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்திக் பாண்டியா 19(18) ரன்களும், லோகேஷ் ராகுல் 7(8) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
மனிஷ் பாண்டே மற்றும் தோனி அதிரடியாக விளையாடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதில் மனிஷ் பாண்டே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மனிஷ் பாண்டே 50(42), தோனி 49(42) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.
இலங்கை அணியின் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 2 விக்கெட் எடுத்தார்.
அடுத்து இலங்கை அணி வெற்றி பெற 376 ரன்கள் தேவை என்ற நிலையில் தனது பேட்டிங்கை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.