IND vs SL 2nd T20I: கடைசி ஓவரில் ட்விஸ்ட்; இலங்கை அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2021, 06:11 AM IST
IND vs SL 2nd T20I: கடைசி ஓவரில் ட்விஸ்ட்; இலங்கை அணி வெற்றி title=

IND vs SL 2nd T20I: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேடிங்க செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் (Shikhar Dhawan) மற்றும் அறிமுக வீரர் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த ஆட்டதில் (India vs Sri Lanka) ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்கள் எடுத்து முதலில் அவுட் ஆனர். இதனையடுத்து அடுத்த அறிமுக வீரர் களமிறங்கினார். 

ALSO READ | இலங்கைக்கு எதிரான மீதமுள்ள டி-20 போட்டிகளில் ஷிகர் தவான் விளையாடுவது சந்தேகம்!

அவர் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் தனஜெயா பந்தில் போல்ட் ஆனார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 

5 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 29 ரன்களை எடுத்தது. அப்போது வெற்றி பெற 90 பந்துகளில் 104 ரன்களை தேவையாக இருந்தது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2, மினோட் பனகா 36, ஹசரங்கா என வீரர்கள் அடுத்தடுத்த வெளியேறினர்.

16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த சமயத்தில் வெற்றி பெற இன்னும் 24 பந்துகளில் 34 ரன்கள் தேவையாக இருந்தது. 

இந்நிலையில் தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அறிமுக பந்து வீச்சாளர் சக்காரியா அந்த ஓவரை வீசினார். கடைசி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

ALSO READ | இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News