IND vs SA: ஆர்சிபி வீரருக்கு அடித்த லக்! உற்சாகத்தில் ஆல்ரவுண்டர்!

ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா முதுகு வலி காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Sep 27, 2022, 01:04 PM IST
  • செப்டம்பர் 28 முதல் தொடங்குகிறது இந்தியா தென்ஆப்பிரிக்கா தொடர்.
  • திருவனந்தபுரத்தில் முதல் போட்டி நடைபெறுகிறது.
  • மொத்தம் 3 டி20, 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
IND vs SA: ஆர்சிபி வீரருக்கு அடித்த லக்!  உற்சாகத்தில் ஆல்ரவுண்டர்! title=

கோவிட் தொற்றில் இருந்து இன்னும் மீளாததால் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் பெங்கால் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது ஓய்வு பெற்ற ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடர் புதன்கிழமை (செப்டம்பர் 28) திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.  ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் முதுகுவலி காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரை அணிக்கு மீண்டும் அழைக்க பிசிசிஸ திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!

“ஷமி கோவிட்-19 தொற்றில் இருந்து மீளவில்லை. அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை, எனவே தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகுவார். தென்னாப்பிரிக்கா தொடரில் ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் தொடருவார்” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.  இருப்பினும், பாண்டியாவுக்குப் பதிலாக ஷாபாஸ் ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கு ஹர்திக்கிற்கு பதிலாக மாற்று ஆல்ரவுண்டராக இவர் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.  

shahbaz ahmed

ரஜத் படிதார்க்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு?

இந்தியாவின் முன்னணி வீரர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் மும்முரமாக இருப்பதால், ஷிகர் தவான் தலைமையிலான ODI அணியில், ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடிய பல வீரர்கள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.  ஷுப்மான் கில், சஞ்சு சாம்சன் போன்றவர்கள் அணியில் கண்டிப்பாக இருந்தாலும், இளம் மத்தியப் பிரதேசம் மற்றும் RCB பேட்டர் ரஜத் படிதார்க்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் ஐபிஎல் 2022 மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  

மேலும் படிக்க | இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும் - எச்சரிக்கும் ரோஹித் சர்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News