இந்தியா பந்துவீச்சு - மீண்டும் புவி; பந்த் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 25, 2022, 08:16 PM IST
  • இரு அணிகளும் தலா 1 போட்டியை வென்றுள்ளது.
  • கடந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • புவனேஷ்வர் குமார் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா பந்துவீச்சு - மீண்டும் புவி; பந்த் வெளியேற்றம் title=

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த்-க்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

முன்னதாக, மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற போட்டி மழை காரணமாக 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

மேலும் படிக்க | சொல்பேச்சு கேட்காத வீரரை வெளியே அனுப்பிய ரகானே... இறுதிப்போட்டி வெற்றிக்கு முன் பரபரப்பு

இதன்மூலம், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலை பெற்றுள்ளதால், இன்றைய போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, உள்நாட்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி வருவதால், இந்த தொடரை அதேபோன்று கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபக் ஹூடா காயம் காரணமாக இந்த போட்டியில் இடம்பெறவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பந்துவீச்சிற்கு சாதமாக இருக்கும் என்பதால், ரிஷப் பந்திற்கு ஓய்வளிக்கப்பட்டு, புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பிளேயிங் XI

இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார்.

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா,டேனியல் சாம்ஸ்.

மேலும் படிக்க | விடைபெற்றார் ஜூலன் கோஸ்வாமி! இந்திய மகளிர் கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News