பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்ககியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. முரளி விஜய், ஜெயன்ந்த் யாதவ் நீக்கப்பட்டு, அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் அணியில் இடம் பிடித்தனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை முகுந்த் வீணடித்தார். எட்டு பந்துகளை சந்தித்த நிலையில் ரன் எதுவும் ஒன்றி ஸ்டார்க் பந்தில் எல்.பி. டபிள்யூ ஆகி வெளியேறினார்.
இதையடுத்து வந்த புஜாரா 17 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 27.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.