பெங்களூரு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்ககியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. முரளி விஜய், ஜெயன்ந்த் யாதவ் நீக்கப்பட்டு, அபினவ் முகுந்த் மற்றும் கருண் நாயர் அணியில் இடம் பிடித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி 17 ரன்கள் எடுத்த போது லியோன் பந்தில் அவுட்டானார்.
தொடர்ந்து வந்த கோலி 12 ரன்கள் எடுத்திருந்த போது லியோனின் பந்தில் அவுட்டாகி வெளியேறியதோடு ஒரு ரிவீவையும் வீணடித்தார்.பின்னர் வந்த ரஹானே 17 ரன்களில் அவுட்டானார். இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் விளாசிய கருண் நாயர் 26 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அஸ்வின் 7, சஹா 1, ஜடேஜா 3, இசாந்த் சர்மா 0 என சொல்லி வைத்தார் போல் லியோன் பந்தில் அவுட்டாகி வெளியேறினர்.
கடைசி வரை தனியாக போராடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 90 ரன் எடுத்திருந்த போது லியோன் பந்தில் அவுட்டானார்.
இந்நிலையில் 71.0 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்தத.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் லியோன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 16 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 23 ரன்களுடனும், ரென்ஷா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
It is Stumps on Day 1 of the 2nd @Paytm Test. Australia are 40/0 from 16 overs & trail India 189/10 by 149 runs. #INDvAUS pic.twitter.com/iEpITde5Cu
— BCCI (@BCCI) March 4, 2017