இந்தியா - ஆஸ்திரேலியா: பிளேயிங் லெவனில் இவருக்கு வாய்ப்பு இல்லை! 11 பேர் விவரம்

உலக கோப்பை 2023: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேப்டன் ரோகித் சர்மா முக்கிய வீரருக்கு இடம் கொடுக்க முடியாமல் போகும் சூழல் உள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 4, 2023, 04:37 PM IST
  • ஆஸ்திரேலியா - இந்தியா மோதல்
  • இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
  • ஸ்ரேயாஸ், குல்தீப் இடங்கள் கேள்விக்குறி
இந்தியா - ஆஸ்திரேலியா: பிளேயிங் லெவனில் இவருக்கு வாய்ப்பு இல்லை! 11 பேர் விவரம் title=

உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெறும் நிலையில், மீண்டும் ஒருமுறை இந்திய அணி உலக சாம்பியனாகும் வாய்ப்பு நெருங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ஐசிசி கோப்பை மற்றும் உலக கோப்பை கனவை நனவாக்கும் என்பது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எண்ணமாக இருக்கிறது. அதற்கேற்ப இந்திய அணி அண்மையில் விளையாடிய ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது. 

அத்துடன் ஒட்டுமொத்த அணியும் இப்போது செம பார்மில் இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா முதல் பவுலிங்கில் முகமது சிராஜ் வரை அணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வீரர்களும் குறை சொல்ல முடியாத அளவுக்கான பார்மில் இருக்கிறார்கள். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் வலுவான அணியாக இருப்பதால் உலக கோப்பையை வெல்லும் அணியாக இந்திய அணியை பல முன்னாள் வீரர்களும் முன்மொழிந்துள்ளனர். இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடங்குகிறது. இப்போட்டியில் யாரெல்லாம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்க | இந்தியாவுக்கு மட்டும் பேட்டிங் பிட்ச்..! அனைத்து போட்டிகளுக்குமான மைதானங்கள் ஒரு பார்வை

சென்னை ஆடுகளம்: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின்போது சென்னை ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும். அதேபோல் சென்னையின் ஆடுகளம் எப்போதும் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஷுப்மான் கில் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்குவார்கள். இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி 3வது இடத்தில் விளையாடுவார்.

யாருக்கு வாய்ப்பு இல்லை?

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார். அத்தகைய சூழ்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற வேண்டும். ஆல்-ரவுண்டராக, இந்திய அணி துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 5வது இடத்தில் பேட்டிங் செய்வார். ஃபினிஷர் சூர்யகுமார் யாதவ் 6வது இடத்தில் களமிறங்குவார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்திலும் விளையாடுவார்கள்.

பந்துவீச்சாளர்கள் யார்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியின்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியிருக்கும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். மேலும், சென்னை மைதானம் அவருக்கு சொந்த மைதானம் என்பதால் கூடுதல் பலம். அவருடன் வேகப்பந்து வீச்சாளர்களில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுவார்கள். மாறாக, குல்தீப் யாதவுக்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்பட்டால் அஸ்வின் இடம் கேள்விக்குறியாகும். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்: 

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

மேலும் படிக்க | ODI உலகக் கோப்பை 2023: அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News