டி 20 உலக கோப்பை 2021 போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகின்றன. இந்தியாவில் நடைபெற வேண்டிய உலக கோப்பை போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெறுகின்றன. கடந்த 17ம் தேதி முதல் தொடங்கிய டி20 உலக கோப்பையில் முதலில் 8 அணிகள் சூப்பர் 12 அணியில் இடம் பெற விளையாடின.
குரூப் A அணியில் ஸ்ரீலங்கா மற்றும் நமீபியா அணிகளும், குரூப் Bயில் ஸ்காட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளும் சூப்பர் 12 அணிக்கு தகுதி பெற்றன. சூப்பர் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு குரூப் A வில் இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளும், குரூப் Bயில் இந்தியா, நமீபியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இரண்டு குரூப்பிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இன்று தொடங்கும் சூப்பர் 12 போட்டியில் குரூப் A வில் இடம் பெற்ற 4 அணிகள் விளையாடுகின்றன. மதியம் 3.30க்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்காவும், இரவு 7.30க்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதவுள்ளன. நாளை பரம எதிரிகளான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி துபாய் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
சூப்பர்12 குரூப் ஏ
மேற்கிந்திய தீவுகள்
பங்களாதேஷ்
இங்கிலாந்து
இலங்கை
ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்கா
சூப்பர் 12 குரூப் B
ஆப்கானிஸ்தான்
ஸ்காட்லாந்து
இந்தியா
நமீபியா
பாகிஸ்தான்
நியூசிலாந்து
ALSO READ டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக அமைவாரா வருண் சக்கரவர்த்தி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR