ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த அக். 16ஆம் தேதி குரூப் சுற்றுப்போட்டிகளுடன் தொடங்கிய இத்தொடரின் இறுதிப்போட்டி நவ. 13ஆம் தேதி அன்று நிறைவடைகிறது.
சூப்பர் 12 சுற்று நாளை மறுத்தினத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் எந்த நிலைகளில் செல்ல உள்ளது என்ற பரபரப்பு அதிகமாகியுள்ளது. அந்த வகையில், இன்றைய இரண்டு போட்டிகளும் முதல் பிரிவு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இந்திய நேரப்படி, இன்று காலை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளும் சூப்பர் 12 சுற்றில் தங்களின் கடைசி போட்டியை இன்று விளையாடியது. அயர்லாந்து இந்த போட்டியுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
A fantastic half-century
Kane Williamson was adjudged the @aramco POTM in #IREvNZ #T20WorldCup pic.twitter.com/rNEvRLU8Is
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2022
டாஸை இழந்த நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 61 ரன்களை எடுத்தார். இதில், குறிப்பாக அயர்லாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் லிட்டில் வீசிய 19ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன், ஜிம்மி நீஷம், மிட்செல் சாட்னர் ஆகியோரை அடுத்தடுத்து விக்கெட் எடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதில், வில்லியம்சன் கீப்பர் டாக்ரேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, மற்ற இருவரும் எல்பிடபிள்யூ முறையில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
மேலும் படிக்க | 'ஆத்தீ... பாகிஸ்தான் வேண்டவே வேண்டாம்' - கொந்தளிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
இந்த தொடரின் இரண்டாவது ஹாட்ரிக்கை லிட்டில் பதிவு செய்தார். இதுதான் அவரது சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது. அவர் மொத்தம் நான்கு ஓவர்கள் வீசி 22 ரன்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தொடரில் இதற்கு முன், ஐக்கிய அமீரக வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான மெய்யப்பன் குரூப் சுற்றில், இலங்கை அணிக்கு எதிராக ஹாட்ரிக்கை வீழ்த்தியிருந்தார்.
Josh Little creates history with #T20WorldCup hat-trick
Kane Williamson returns to form
Ireland's campaign over as Kiwis inch towards semisAll the talking points from #IREvNZ in Adelaide https://t.co/zmtKAkwUa9
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2022
நியூசிலாந்து அணி 35 ரன்கள் விச்சியாசத்தில் வெற்றி பெற்றதால், அதிக ரன்ரேட்
பெற்று 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றாலும் நியூசிலாந்து அணி முதலிடத்தில் நீடிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Afghanistan have won the toss and opted to bowl at the Adelaide Oval
Australian skipper Aaron Finch will miss the match due to an injury, with Matthew Wade leading the side. #AUSvAFG | #T20WorldCup | https://t.co/gUwgDMe7KR pic.twitter.com/lGLdAUhp5I
— T20 World Cup (@T20WorldCup) November 4, 2022
நியூசிலாந்து - அயர்லாந்து போட்டியை அடுத்து, அதே அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கன் அணி, முதலில் பந்துவீசி வருகிறது. சிறுகாயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் பின்ச் இப்போட்டியில் விளையாடாததால், மேத்யூ வேட் கேப்டனாக இன்று செயல்படுகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ