புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் (Cricket World Cup) போட்டி 1975 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர், இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
தற்போது 12 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார் முகமது ஷமி. இந்த தொடரின் முதல் ஹாட்ரிக் நாயகன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் யார்... யார்...? ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்கள். எப்பொழுது அந்த சாதனைகள் செய்யப்பட்டது என்று பார்ப்போம்.
உலகக் கோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர் இந்திய அணியை சேர்ந்த சேத்தன் சர்மா. அதாவது 1987 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சேத்தன் சர்மா ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். உலகக் கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் நம்ம இந்தியர்.
1975, 1979, 1983, 1992, 1966 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தப்படவில்லை.
உலகக்கோப்பை ஹாட்ரிக் பட்டியல்:
ஆண்டு | வீரரின் பெயர் | சொந்த அணி | எதிர் அணி |
1987 | சேதன் சர்மா | இந்தியா | நியூசிலாந்து |
1999 | சக்லைன் முஷ்டாக் | பாகிஸ்தான் | ஜிம்பாப்வே |
2003 | சமிந்த வாஸ் | இலங்கை | பங்களாதேஷ் |
2003 | பிரட் லீ | ஆஸ்திரேலியா | கென்யா |
2007 | லசித் மலிங்கா | இலங்கை | தென் ஆப்பிரிக்கா |
2011 | கெமர் ரோச் | வெஸ்ட் இண்டீஸ் | நெதர்லாந்து |
2011 | லசித் மலிங்கா | இலங்கை | கென்யா |
2015 | ஸ்டீவன் ஃபின் | இங்கிலாந்து | ஆஸ்திரேலியா |
2015 | ஜே.பி. டுமினி | தென்னாப்பிரிக்கா | இலங்கை |
2019 | முகமது ஷமி | இந்தியா | ஆப்கானிஸ்தான் |