என்னை சுற்றி சதியில் ஈடுபடும் வீரர்கள்; பணத்திக்காக தங்களை விற்றுவிட்டனர்: அக்தர்

என்னை சுற்றிலும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடும் வீரர்கள் காணப்பட்டனர். எங்கள் அணி வீரர்கள், எதிரணி வீரர்கள் என அனைவருக்கும் எதிராக ஆட வேண்டியிருந்தது என பாக்கிஸ்தானின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 2, 2019, 01:05 PM IST
என்னை சுற்றி சதியில் ஈடுபடும் வீரர்கள்; பணத்திக்காக தங்களை விற்றுவிட்டனர்: அக்தர் title=

புதுடெல்லி: வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் (Mohammad Amir) மற்றும் ஆசிப் ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு (ICC anti-corruption) தீர்ப்பாயம் 2011 ஆம் ஆண்டு ஐந்து வருடங்களுக்கு தடை விதித்தபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அமீர் மற்றும் ஆசிப் தவிர, தொடக்க பேட்ஸ்மேன் சல்மான் பட் மேட்ச் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டார். இதுக்குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் (Shoaib Akhtar), தனது முன்னாள் பாகிஸ்தான் (Pakistan) அணியின் வீரர்கள் மற்றும் எதிர் அணியின் வீரர்கள் என மொத்தம் 21 வீரர்களுக்கு எதிராக விளையாட வேண்டியிருந்தது என மேட்ச் பிக்ஸிங் அப்செஷன்களை குறித்து பேசியுள்ளார்.

Rewind With Samina Peerzada நிகழ்ச்சியில் அவர் கூறியது, நான் ஒருபோதும் பாகிஸ்தானை ஏமாற்ற முடியாது, மேட்ச் பிக்ஸிங் செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் இருந்தேன். நான் மேட்ச் பிக்ஸர்களால் சூழப்பட்டேன். நான் 22 பேருக்கு எதிராக விளையாடினேன். எதிரணியின் வீரர்கள் 11 பேருக்கு எதிராகவும், எனது அணியின் பத்து பேருக்கு எதிராகவும் விளையாட வேண்டியிருந்தது. மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது யார் யார் என்று தெரியும் நிறைய ஆட்டத்தில் மேட்ச் ஃபிக்ஸிங் இருந்தது. முகமது ஆசிப் மேட்ச் பிக்ஸிங் மூலம் தீர்மானிக்கப்பட்ட போட்டிகளின் பட்டியல் மற்றும் எப்படி செய்தார்கள் என்று என்னிடம் கூறியுள்ளார் என ஷோயப் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோரை நினைவு கூர்ந்த ஷோயப் அக்தர், இந்த சதி நிர்ணயம் குறித்து கேள்விப்பட்டபோது, தனக்கு மிகவும் வேதனையும் கோபமும் ஏற்பட்டது என்று கூறினார்.

மேலும் கூறுகையில், நான் அமீர் மற்றும் ஆசிப் ஆகியோரைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். அவர்களின் திறமை வீணானது. அவர்களின் இதைப் மேட்ச் பிக்ஸிங் குறித்து கேள்விப்பட்ட போது, நான் சுவரில் குத்தினேன். நான் மிகவும் வருத்தப்பட்டேன். பாகிஸ்தானின் இந்த இரண்டு சிறந்த பந்து வீச்சாளர்கள் புத்திசாலிகள். மேட்ச் பிக்ஸிங் மூலம் இரண்டு சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் வீணடிக்கப்பட்டனர். ஒரு சிறிய பணத்திற்கு தங்களை விற்றுவிட்டனர் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்த கூறினார்.

Trending News