IPL 2024 MI vs RCB Match Highlights: ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் 25ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நபி, கோட்ஸி ஆகியோர் முதலிரண்டு ஓவர்களை வீசினர், ஆனால் விக்கெட் கிடைக்கவில்லை. பும்ரா வீசிய மூன்றாவது ஓவரில் பெரிய மீன் விராட் கோலியே விழுந்தார். அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து சென்றாலும் பாப் டூ பிளெசிஸ் நம்பிக்கையுடன் காணப்பட்டார்.
பட்டிதார் அதிரடி அரைசதம்
அடுத்து வந்த ஜாக்ஸ 2 பவுண்டரிகளை அடித்து 8 ரன்களில் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ரஜத் பட்டிதர் களம் கண்டார். இவர் சற்று ஆறுதல் அளிக்க டூ பிளெசிஸின் அதிரடியில் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி 44 ரன்களை எடுத்தது. தொடர்ந்து பட்டிதார் அதிரடியுடன் விளையாடி அரைசதம் அடித்தார். இருப்பினும் 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | சென்னை அணிக்கு புதிய சிக்கல்! அணிக்கு திரும்பும் டெவோன் கான்வே!
மேக்ஸ்வெல் வழக்கம்போல் டக்அவுட்டாகி செல்ல டூ பிளெசிஸ் 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்ட ஓவர்களில் விக்கெட்டை பும்ரா அள்ளிக்கொண்டிருக்க தினேஷ் கார்த்திக் மட்டும் அதிரடியுடன் விளையாடி அரைசதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை ஆர்சிபி அடித்தது. கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 53 ரன்களை அடித்திருந்தர். பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
வாணவேடிக்கை காட்டிய மும்பை
197 ரன்கள் பெரிய இலக்காக தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் பனியின் தாக்கம் அதிகம் இருந்தது. அதுமட்டுமின்றி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் ஏனோதானோ என பந்துவீச்சினர். முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே போயிருந்தது. இஷான் மற்றும் ரோஹித் அங்கிருந்து ரன் வேகத்தை அதிகப்படுத்த தொடங்கினர். அவர்கள் ப பவர்பிளேயிலே 72 ரன்களை குவித்தனர்.
இதில் இஷான் கிஷன் அரைசதம் கடந்தார். இஷான் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சூர்யகுமாரும் வாணவேடிக்கை காட்டினார். ஆகாஷ் தீப்பின் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதகளப்படுத்தினார். அவர் 18 பந்துகளிலேயே அரைசதம் அடித்தார். ரோஹி சர்மா 38 ரன்களில் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்க, சூர்யாவும் 19 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
A @Jaspritbumrah93 special with the ball backe by a power packed batting performance help @mipaltan win
Scorecard https://t.co/Xzvt86cbvi#TATAIPL | #MIvRCB pic.twitter.com/ro7TeupAQj
— IndianPremierLeague (@IPL) April 11, 2024
15 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள்
ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்திருந்தார். அவரும், திலக் வர்மாவும் நின்று ஆட்டத்தை 15.3 ஓவர்களிலேயே முடித்துக்கொடுத்தனர். இதன்மூலம், மும்பை அணி 27 பந்துகளை மிச்சம் வைத்து இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும், திலக் வர்மா 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இன்னிங்ஸில் மொத்தம் 15 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகன் விருதை பும்ரா வென்றார்.
மேலும் படிக்க | ஐபிஎல்லில் ஆமை வேகத்தில் சதம் அடித்த 5 பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ