இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அதிரடியாக அறிவித்தார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் தோல்வி ஏற்பட்ட ஒரு சில தினங்களிலேயே அவர் இவ்வாறு அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இதுவரை இருந்த இந்திய டெஸ்ட் கேப்டன்களிலேயே மிகச்சிறந்த ரெக்கார்டை வைத்திருப்பவர் விராட் கோலி. இவரது தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.
ALSO READ | Virat Kohli ராஜினாமா: டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட் கோலி
ஆனால் விராட் கோலி ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்ற கேள்வி பொதுவெளியில் எழுந்துள்ளது. பிசிசிஐ-க்கும் அவருக்கும் இடையிலான உறவு அண்மைக்காலமாக சுமூகமாக இல்லை. 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கோலி, தொடர்ந்து இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்க விரும்பம் தெரிவித்தார். ஆனால், குறுகிய வடிவலான போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருப்பது சரியல்ல என்ற முடிவை எடுத்த பிசிசிஐ, விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்பாக எடுக்கப்பட்ட இந்த முடிவு அவருக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
பொதுவெளியிலும் இதுகுறித்து விராட்கோலி வெளிப்படையாக பேசினார். அந்த அதிருப்தியின் காரணமாக்கூட விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலியின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாக ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கேப்டனாக மகத்தான பங்களிப்பை விராட் வழங்கியிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ள ரோகித் ஷர்மா, விராட்டின் இந்த முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ | அம்பயர்களால் இந்திய அணிக்கு கிடைத்துள்ள பரிசு..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR