இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங்கும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான சைமண்ட்ஸூம் கிரிக்கெட் களத்தில் எதிரிகளாக இருந்தனர். இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் என்றாலே இருவரின் வார்த்தைப்போர் உட்சக்கட்ட அளவில் இருக்கும். அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் நடத்தால், அவர்களின் சீண்டல்களை சொல்லவே தேவையில்லை. வரம்புக்கு மீறி செயல்படுவார்கள். அவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுப்பவர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங்.
மேலும் படிக்க | நான்காவது அணியாக பிளே ஆப்பிற்கு நுழைய போவது யார்?
இதனால், கிரிக்கெட் களத்தைக் கடந்து வெளியிலும் இவர்களுக்கு இடையே சண்டை பூதாகரமாக வெடித்தது. ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையிலான சண்டை மோதல் வரை சென்றதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படியாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் நேர் எதிர் துருவங்களாக இருந்த சைமண்ட்ஸ் மற்றும் ஹர்பஜன் பின்னாளில் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருவரும் விளையாடியபோது நெருக்கம் அதிகரித்தது. இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும்போது, " சைமண்ட்ஸ் நல்ல நண்பர்.
நல்ல மனிதர் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியபோது தெரிந்து கொண்டேன். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிபோது, நள்ளிரவில் எல்லாம் ஜாலியாக பல கதைகளை பேசி சிரித்துள்ளோம் அவர் இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் அவரின் மறைவு செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். எங்களை நண்பர்களாக மாறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு நன்றி" என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை
சைமண்ட்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் இழப்பு கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள், இந்நாள் வீரர்கள் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் சைமண்ட்ஸூக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR