பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருந்த எம்.எஸ்.தோனியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அடுத்த நபர் யார் என்பது குறித்து மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
Cricfit உடனான அரட்டையின் போது உத்தப்பா தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரியான் பராக் இந்தியாவின் 'அடுத்த எம்.எஸ். தோனியாக' இருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தரப்பு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக விளையாடும் பராக், IPL 2019 -ல் இடம்பெற்றது மற்றும் ஓரிரு சந்தர்ப்பங்களில் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தியது உத்தப்பாவின் கணிப்புக்கு காரணமாய் அமைந்துள்ளது.
18 வயது நிரம்பிய அசாம் கிரிக்கெட் வீரரும், IPL வரலாற்றில் அரை சதம் அடித்த இளைய வீரர் எனும் சாதனை தன் வசம் வைத்துள்ளவருமான பராக், தோனியின் இடத்தை நிறப்புவார் என உத்தப்பா கூறியுள்ளது மற்ற வீரர்களிம் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில்., "தற்போது, களத்தில் உள்ள வீரர்களில் என்னை உற்சாகப்படுத்தும் இளம் வீரர் ரியான் பராக். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், அவர்தான் கவனிக்கப்பட வேண்டியவர். அவர் நன்றாக கவனித்து, நன்கு கையாளப்பட்டு நன்கு வளர்க்கப்பட்டு, பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
"அவர் அடுத்த எம்.எஸ். தோனியாக இந்தியாவின் வெற்றிக்கு உதவலாம்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தோனி தனது நேரத்தை தேசிய அணியில் செலவிடுவதை தவிர்க்க முடிவு செய்ததிலிருந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 38 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுக்கு நீண்டகால மாற்றீட்டைக் கண்டுபிடிப்பதற்கான வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
முதலில், ரிஷாப் பந்த் தான் ஒப்புதல் பெற்றார், இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு பெருமளவில் குறைவான செயல்திறனை அவர் வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக தேசிய அளவில் KL ராகுல் நியமிக்கப்பட்டார்.
இதன் போது தான் பராக் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான வீரராக தென்பட்டார். நான் அவரை வலைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், அவரது மட்டை அனுபவமுள்ள ஆட்டக்காரரின் மட்டையை போல் செயல்படுகிறது என்றும் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.
மொழியாக்கம் : அரிஹரன்