ஆஸ்திரேலயாவில் நடைபெற்ற கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை அபாரமாக ஆடி வீழ்த்தியது. தனி ஒரு மனிதனாக இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. குறிப்பாக, 19 வது ஓவரில் அவர் அடித்த 2 சிக்சர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அந்த ஓவரை ஹரீஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரில் விராட் கோலி 2 சிக்சர்களை அடிக்காமல் இருந்திருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியாது.
மேலும் படிக்க | Gautam Gambhir: சூர்யகுமாருக்காக பிசிசிஐக்கு தலைவலியை உண்டாக்கிய காம்பீர்..!
ஆனால், துல்லியமாக ஹரீஸ் ரவூப் வீசிய பந்துகளை லாவகமாக எதிர்கொண்டு ஸ்ரெயிட் திசையிலும், ஸ்கொயர் லெக்கிலும் இரண்டு சிக்சர்களை அடித்திருந்தார் விராட் கோலி. இரண்டு ஷாட்டுகளையும் அன்று கிரிக்கெட் உலகமே கொண்டாடி தீர்த்தது. அதனால் ஏற்பட்ட மிகப்பெரிய மனக்காயத்தில் இருந்து இப்போது வரை ஹரீஸ் ராவூப்பால் வெளியே வரமுடியவில்லை. அண்மையில் பாகிஸ்தானில் இருக்கும் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹரீஸ் ராவூப், விராட் கோலி ஒரு அதிர்ஷ்டத்தில் அந்த ஷாட்டை அடித்துவிட்டதாக தெரவித்துள்ளார். ஆனால், மீண்டும் அப்படியொரு ஷாட்டுகளை தன்னுடைய ஓவரில் நிச்சயம் அடிக்க முடியாது என தெரிவித்துள்ள அவர், விராட் கோலியை மீண்டும் களத்தில் வீழ்த்த வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்றும் கூறியுள்ளார்.
ஹரீஸ் ராவூப் பேசும்போது, " அந்த இரண்டு ஷாட்டுகளும் எனக்கு மிகபெரிய வலியை கொடுத்தது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். ஆனால், ஒரு அதிர்ஷ்டத்தில் அந்த ஷாட்டை விராட் கோலி அடித்துவிட்டார். மீண்டும் ஒருமுறை இந்திய அணியுடன் விளையாடும்போது நிச்சயம் விராட் கோலியால் அந்த ஷாட்டுகளை அடிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ