IPL2022: டாப் கியரில் போகும் குஜராத் டைட்டன்ஸ்

கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2022, 08:21 PM IST
  • கொல்கத்தா அணியை வீழ்த்திய குஜராத்
  • ஆன்ரே ரஸ்ஸலின் போரோட்டம் வீணானது
  • புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்
IPL2022: டாப் கியரில் போகும் குஜராத் டைட்டன்ஸ் title=

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்க்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. பிற்பகலில் நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. சஹா 25 ரன்களுக்கும், சுப்மான் கில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினார்.
49 பந்துகளில் 69 ரன்கள் விளாசிய அவர், டிம் சவுத்தி பந்தில் அவுட்டானார்.

மேலும் படிக்க | IPL2022: சண்டை போட்டுக்கொண்ட சாஹல் - குல்தீப்

கடந்த போட்டியில் அதிரடி காட்டிய மில்லர் இப்போட்டியில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறியதால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 156 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அற்புதமாக பந்துவீசிய அன்ரே ரஸ்ஸல் ஒரே ஓவரில் 5 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதனையடுத்து பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சாம்பில்லிங்ஸ் 4 ரன்களுக்கும், நரைன் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் ரிக்கு சிங் 35 ரன்கள் எடுக்க, ரஸ்ஸல் அதிரடியாக ஆடி குஜராத் அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார். 

25 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த அவர், முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரின் ஆட்டமிழப்புக்கு பிறகு ஆட்டம் குஜராத் அணி பக்கம் முழுவதுமாக சென்றது. முடிவில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

மேலும் படிக்க | ரிஷ்ப் பன்டுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்ட அஸ்வின் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News