உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் சி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை பிரான்ஸ் அணி வீழ்த்தியது!
FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இன்று கஸான் நகரில் நடைப்பெற்ற குரூப் சி பிரிவு போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
போட்டியின் 58-வது நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் அண்டொய்னே கிரைஸ்மன் ஆட்டத்தின் முதல் கோலினை பதிவு செய்தார். அடுத்த நான்காவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் மைல் ஜெடினாக் பெனால்டியின் போது கோல் அடிக்கவே ஆட்டத்தில் சம நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து ஆட்டத்தில் விறுவிறுப்பு தொடங்க, இறுதியில் பிரான்சின் பால் போக்பா 80-வது நிமிடத்தில் கோல் அடிக்க 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி பெற்றது.