தோனி போல் செயல்படமாட்டேன் - ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி போல் என்னுடைய கேப்டன் அணுகுமுறை இருக்காது என ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 05:45 PM IST
தோனி போல் செயல்படமாட்டேன் - ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் title=

ஐபிஎல் 2023 மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி அனைத்து அணிகளும் பயிற்சியில் இறங்கிவிட்டனர். இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை முடித்தவுடன் வீரர்கள் அனைவரும் அவரவர் விளையாடும் ஐபிஎல் அணிகளுடன் இணைந்துவிடுவார்கள். இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி தங்கள் அணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வீரர்களுடன் பாட்காஸ்ட் எடுத்து வருகிறது. அதில் ஏற்கனவே விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேசியுள்ளனர். இப்போது அந்த அணியின் தற்போதைய கேப்டன் பாப் டூபிளசிஸ் பேசியிருக்கிறார். அதில், தோனி, ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கிரீம் ஸ்மித் ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டாலும், அவர்களைப் போல் என்னுடைய கேப்டன் அணுகுமுறை இருக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IPL 2023: சேப்பாக்கத்தில் தோனி - மைதானத்துக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

அந்த பாட்காஸ்டில் டூபிளசிஸ் பேசும்போது, தென்னாப்பிரிக்கா அணிக்கு நான் முதன்முதலாக தேர்வாகும்போது கிரீம் ஸ்மித் கேப்டனாக இருந்தார். அவருடைய பேச்சும் மற்றும் தலைமை பண்பும் என்னை மிகவும் கவர்ந்தது. வீரர்களுடன் அவர் டிரெஸ்ஸிங் ரூமில் அவர் பேசம்போது, அனைத்து வீரர்களையும் தன்னுடைய பேச்சால் கட்டுக்குள் வைத்திருப்பார். அவர் பேசும்போது டிரெஸ்ஸிங் ரூம் மிகவும் அமைதியாக இருக்கும். அவருக்குப் பிறகு ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஆகியோரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்முதலாக தேர்வானபோது பிளெம்மிங் அருகில் அமர்ந்து கேப்டன்ஷிப் பொறுப்பு குறித்து அதிகம் கேள்விகளை கேட்டேன். அவர் நிறைய பதில்களையும் அறிவுரைகளையும் வழங்கினார். பிறகு தோனி தலைமையின் கீழ் பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினேன். அவருடைய கேப்டன்ஷிப் திறமையை ஒருவர் தெரிந்து கொள்வது என்பது கடினம். இக்கட்டான சூழலில் அவர் எடுக்கும் முடிவு மற்றும் வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். 

தோனி ஒரு போட்டியை பார்க்கும் விதமும், நாம் போட்டியை பார்க்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். அதேநேரத்தில் அவர்களுடைய பாணியை நான் ஒருபோதும் பின்பற்ற மாட்டேன். நான் நானாக இருக்க விரும்புகிறேன். அப்படி இருந்தால் மட்டுமே கடினமான நேரங்களில் நம்முடைய திறமை வெளிப்படும். ஏதாவதொரு சமயத்தில் நம்முடைய இயல்பும் வெளிப்பட்டுவிடும். அதனால் யாரையும் பின்பற்றமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | தோனிக்கு பிறகு சிஎஸ்கே நம்பும் அந்த பிளேயர்..! ஐபிஎல் 2023-ல் முழுமையாக விளையாடுவாரா?

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News